பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2013

முள்ளிவாய்க்காலில் உறவுகளுக்கு அஞ்சலி
முள்ளிவாய்க்காலில் இறந்த உறவுகளுக்கு நகரசபை பதில் தலைவருமாகிய எம்.எம் ரதன் தலமையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


2009ஆம் ஆண்டு  மாத காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு இன்று முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு நேரடியாக சென்று விளக்கேற்றி மலர் அஞ்சலியும் செலுத்தியதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவரும் நகரசபை பதில் தலைவருமாகிய எம்.எம் ரதன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பிள்ளையார் ஆலயத்திலும் ஜோர்தான் நாட்டு கப்பல் தரித்திருக்கும் கடற்கரையிலும் வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியிலும் கரையான் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் கற்பூரம் கொழுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தி மலர் அஞ்சலி செலுத்தியும் உயிர் நீர்த்த மக்களின் ஆத்மசாந்தி பிரார்த்தனையிலும் ஈடுபட்டோம்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல அதுதான் எமது போராட்டத்தின் மற்றுமோர் ஆரம்பம். இறந்து போனவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை.

இதனது வெளிப்பாடே முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்று எமது உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியுள்ளோம் என்றார்.

இதேவேளை நாளை வடக்கின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கிழக்கு இணைந்த எமது தாயகத்தில் மற்றும் தமிழகத்திலும் புலம்பெயர்ந்த எமது உறவுகள் பல நாடுகளில் எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில் நேரடியாக அதே மண்ணில் அஞ்சலி செலுத்தப்பட்டது விசேட அம்சமே.