பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2013

கொழும்பு பொரளையில் பதற்ற நிலைமை
பொரளையிலுள்ள ஜயரட்ன மலர்ச்சாலைக்கு முன்பாக பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீக்குளித்து உயிரிழந்துள்ள வண. போவத்த இந்திரட்ன தேரரின் பூதவுடலை இரத்தினபுரிக்கு எடுத்துச் செல்வதற்கு சிஹல ராவய உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இதேவேளை, கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் கொழும்பு வரையான காலி வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பௌத்த பிக்குகள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.