பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2013

கொழும்புத் துறைமுக களஞ்சியசாலையை அண்மித்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும் வரையிலும் அந்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
பொலிஸ் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 24 ஆம் திகதி திடீர் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.