பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2013



ஏ.கே. மூர்த்தி கைது : புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
 


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 


தடையை மீறி ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பா.ம.கவினரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்த முற்பட்டபோது  போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 33 பேர் மீதும் 151,71எ அதாவது தடையை மீறி அனுமதியில்லாமல் கூடுவது, வேண்டுமென்றே பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது   ஆகிய இரண்டு வழக்குகள் பதிவு செய்து சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சுதாராணி முன்னிலையில் ஆஜர் படுத்தினர். 
மாஜிஸ்திடேட் சுதாராணி 33 பேருக்கும் மே-17ம் தேதி வரைசிறைக்காவல் விதித்தார். இதையடுத்து இவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.