பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2013

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வி.சி.சுக்லாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் அவரது உடலில் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தன. அவர் இப்போது தி
ல்லியை அடுத்த குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுக்லாவின் உடல்நிலை குறித்து இம்மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நரேஷ் டிரேஹான் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசினார்.
அவர் கூறுகையில், ""சுக்லாவின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதுமை காரணமாக அவர் குணமடைய சிறிது காலம் பிடிக்கும். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
டயாலிசிஸ் சிகிச்சையும் தொடர்கிறது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து இருக்க வேண்டியிருக்கும். சுக்லாவின் உடலில், மார்பில் இரு குண்டுகளும் வயிற்றுப்பகுதியில் ஒரு குண்டும் பாய்ந்துள்ளன.
அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளோம். வழக்கமாக இவ்வாறு உடலில் குண்டுகள் பாய்ந்த பின்னர், சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்படும். அவ்வாறு ஏற்படாமல் தடுக்கவும் சிகிச்சை அளித்து வருகிறோம்'' என்றார்.