பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2013

மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் பட்டேல், அவரது மகன் தினேஷ் பட்டேல் ஆகியோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை அவர்களது சொந்த கிராமமான நன்டேலியில் நடைபெற்றது.
பஸ்தார் பகுதியில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் பரிவர்த்தன் யாத்திரையின் போது
மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட இருவரும் பின்னர் கொலை செய்யப்பட்டு  கிடந்தனர்.
நந்தகுமார் பட்டேலின் இளைய மகன் உமேஷ் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மாநில முதல்வர் ரமண் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.