பக்கங்கள்

பக்கங்கள்

11 மே, 2013


இலங்கை பிரச்சினையை நீக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும் : நாஞ்சில் சம்பத்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை விளக்கப்பொதுக் கூட்டம் பேருந்து திடலில் நடந்தது. 


இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசிய போது, ’’இலங்கை பிரச்சினைகளை தீர்க்க தமிழக முதல்வர் தொடர்ந்து முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது உள்ளிட்ட துணிச்சலான நடவடிக்கைகளால் உலக முழுவதும் வலுவான அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளார். 
இந்தியாவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டு வரும் இலங்கையை இனியும் நட்பு நாடாக கருதக் கூடாது என முதல்வர் தெரிவிப்பதை மத்திய அரசு கேட்க வேண்டும். 
கருணாநிதி டெசோ உள்ளிட்ட பயணிக்காத அமைப்புகளின் மூலம் அறிக்கைகள் விட்டு மக்களை ஏமாற்றி வருகிறார்.இதனை மக்கள் நன்கு அறிவாகள். மத்திய அரசில் அங்கம் வகித்த காலத்தில் இப் பிரச்சினையை தீர்ப்பதை விட்டு விட்டு இப்போது முதல்வரை வசை பாடுகிறார். இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 
எதிர்காலத்தில் தண்ணீருக்காகத்தான் யுத்தம் வரும் சூழ்நிலை நிலவுகிறது. காவிரி, முல்லை, பெரியாறு, சிறுவாணி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுமே தமிழக மக்களுக்கு மிகுந்த பாதிப்பை அளிப்பனவாகும். இதனை தீர்க்கும் முதல்வரின் முயற்சிகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
அ.தி.மு.க. சாதி மனப்பான்மைக்கு எதிரானது, சமத்துவம் நிலவ வேண்டும் என்பதற்காக தான் சாதியை பயன்படுத்தி கலவரங்களை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். 
விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்பதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

நதி நீர் பிரச்சினை, இலங்கை பிரச்சினை போன்றவற்றை முழுமையாக நீக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அதற்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி காண வேண்டும்’’என்று தெரிவித்தார்.