பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2013

மாநிலங்களவைத் தேர்தல்! வேட்பாளர் மாற்றம்! ஜெயலலிதா அறிவிப்பின் பின்னணி தகவல்!
அஇஅதிமுக மாநிலங்களவைத் தேர்தலில் லட்சுமணன், சரவணப்பெருமாள், அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோர் போட்டியிடுவார்கள்
என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா 10.06.2013 திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் 11.06.2013 செவ்வாய்க்கிழமை இரவு, அஇஅதிமுக மாணவர் செயலாளர் பொறுப்பிலிருந்து சரவணப்பெருமாள் விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ள ஜெயலலிதா, மாநிலங்களவைத் தேர்தலில் அஇஅதிமுக வேட்பாளராக தங்கமுத்து போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார்.

சசிகலாவின் ஆதரவாளரான சரவணப்பெருமாள் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாகவும், அவர் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது எதிர்க்கட்சிகள் பிரச்சனையை எழுப்பும் என்றும் உளவுத்துறை மூலம் கார்டனுக்கு தகவல் சென்றதால், வேட்பாளரை மாற்ற அதிமுக மேலிடம் முடிவு செய்து, அதிமுக விவசாயப் பிரிவு செயலாளராக உள்ள கு.தங்கமுத்து மாநிலங்களவை வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.