பக்கங்கள்

பக்கங்கள்

11 ஜூன், 2013

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் உள்ளிட்ட குழுவினர் மீது தாக்குதல்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது இன்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.30 மணியளவில் பலபிட்டிய - மீகெட்டுவத்த பிரதேசத்தில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மீன்பிடி தொழிலுக்குச் சென்று சீரற்ற காலநிலையால் உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர்.
இதன்போது நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்களை இவர்களை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதில் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஸ குறிப்பிட்டார்.