பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2013

வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது: சம்பிக்க

இரண்டு இலட்சத்து 36 ஆயிரம் எண்ணிக்கையிலான தமிழ்மக்களுக்கு கொழும்பில் இருக்க முடியுமென்றால் ஏன் வடக்கில் சிங்கள மக்களுக்கு வசிக்க முடியாது.
என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் சுமார் 21 ஆயிரம் சிங்கள மக்கள் வசித்து வந்தார்கள் ஆனால், தற்போது அங்கு 674 பேர் வசிக்கின்றனர்.
ஏன் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு ஏன் பதிவு செய்துகொள்வதற்கு அதிகாரம் இல்லையா?வெள்ளவத்தை, தெஹிவளை, மட்டக்குளி உட்பட இடங்கள் தற்போது தமிழ் மயமாகியுள்ளது.
இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவின்றோமா? பம்பலப்பிட்டியவில் கூட்டமைப்பு காரியாலமொன்றை திறந்துவைத்துள்ளது அதற்கு நாம் கல்லெறிந்துள்ளோமா? ஆனால் சிங்களக் குடியேற்றத்தை செய்யும்போது கல்லெறிந்தார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.