பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2013

கொழும்பு - பதுளை வீதியில் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர் புகைகுண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் 6 பேரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சப்ரகமுவ பல்கலைகழகத்தின் வகுப்பு தடைக்கு உட்பட்ட மாணவ
தலைவர்களின் பரீட்சை உரிமைக்காக கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 4 மாணவர்களில் 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து பதுளை- பலாங்கொட பிரதான வீதியில் பம்பஹின்ன சந்தியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை வழிவிடுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனினும் அக்கோரிக்கையை மாணவர்கள் ஏற்க மறுக்கவே பொலிஸார் அவர்களைக் களைக்கும் பொருட்டு கண்ணீர்ப் புகைகுண்டு பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காலை 8.30 மணியளவில் இவ் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்படும் அதேவேளை மாணவர்களை கலைப்பதற்கு கலகத் தடுப்பு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.