பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூன், 2013

40 தொகுதிகளே இலக்கு: ஜெயலலிதா பேட்டி
முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒரு நாள் பயணமாக திங்கள்கிழமை டெல்லி சென்றார். மாலையில் திட்டக்குழு துணை தலைவர் மான்டெக்சிங்
அலுவாலியாவை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தமிழகத்திற்கு ரூபாய் 37 ஆயிரத்து 128 கோடி திட்ட நிதியாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நடப்பாண்டுக்கு 37 ஆயிரத்து 128 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளபோதிலும், அந்தத் தொகையில் 91 சதவீதம் மாநில அரசே திரட்ட வேண்டியிருக்கிறது என்றார்.
பாஜகவில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த கேள்விக்கு, அது அக்கட்சியின் உள்விவகாரம் என்றார்.
மேலும் பேசிய அவர், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே அஇஅதிமுகவின் இலக்கு என்றார்.