பக்கங்கள்

பக்கங்கள்

24 ஜூன், 2013

மன்மோகன் சிங் மகளுக்கு அமெரிக்காவில் விருது
பிரதமர் மன்மோகன் சிங்கின் இளைய மகளும் மனித உரிமை சட்ட நிபுணருமான அம்ரித் சிங் (43), எம்.பி. அமி பேரா உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச்
சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் விருது வழங்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த சமுதாய நீதி அமைப்பின் தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் மூத்த சட்ட அதிகாரியாக உள்ளார் அம்ரித் சிங். "இந்தியா அப்ராடு' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மனித உரிமைக்காக இவர் ஆற்றி வரும் சிறப்பான சேவையைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது.

அல்-காய்தா பயங்கரவாத அமைப்புக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து சமூக நீதி அமைப்பின் சார்பில் வெளியாகும் இதழில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார் சிங். இதற்கு சர்வதேச அளவில் வரவேற்பு இருந்தது.
அரசியலில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அமி பேராவுக்கும் விருது வழங்கப்பட்டது. பொதுச் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க அமைப்பின் (யுஎஸ்ஏஐடி) தலைவர் ராஜிவ் ராஜ் ஷாவுக்கு விருது வழங்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில், அமெரிக்க நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட சீனிவாசன் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்டனர்.