பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013

பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கம்
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு வடக்கு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபராக வாஸ் குணவர்தன கடமையாற்றி வந்தார்.
அண்மையில் பம்பலப்பிட்டி வர்த்தகர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் வாஸ் குணவர்தனவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.