பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூன், 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்கள் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களித்தல் தொடர்பான சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை, ஜாதிக்க ஹெல உறுமயவினால் 21வது திருத்தச் சட்டமும் இன்று மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனாதிபதி இந்த திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.