பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2013

அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை

பாரதீய ஜனதா கட்சியில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு பதவி அளித்ததை தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி
அதிருப்தியில் இருந்தார். 

இந்நிலையில், மோடி திட்ட கமிசன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவை மாநில வருடாந்திர திட்டம் குறித்து இறுதி முடிவு எடுப்பது தொடர்பாக சந்தித்து பேசுவதற்காக புதுடெல்லி சென்று இருக்கிறார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அத்வானியை சந்திப்பதற்கு அவரிடம் மோடி அனுமதி கோரினார். அதன்படி அத்வானியை நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள அத்வானியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது. விலகுவதற்கான காரணத்தை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் கூறியது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.