பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜூன், 2013

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகுவதிலிருந்து கலைஞருக்கு விலக்கு
தி.மு.க. தலைவர் கலைஞர் முரசொலி பத்திரிகையில் 23.8.2012 அன்று கேள்வி- பதில் கட்டுரை பகுதியில் அப்போதைய அமைச்சர்
கோகுல இந்திரா, சிவபதி, பச்சைமால் ஆகியோர் பற்றி அவதூறாக குறிப்பிட்டதாக கூறி சென்னை மாவட்ட செசன்சு நீதிமன்றத்தில் 3 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு  நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் முன்பு 24.06.2013 திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது கலைஞர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் குமரேசன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் இந்த 3 வழக்குகளின் விசாரணைக்காக கலைஞர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கலைஞர் நேரில் ஆஜராவதில் விலக்கு அளித்து உத்தரவிட்டார்