பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2013

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.
cropm_aef241bdbb041bbc751ce4c20a2f3b48புதுக்குடியிருப்பு சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் பிரதான வீதியில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் உள்ளே காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டைப் பெருமளவான
மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த வீட்டின் முகப்பு தோற்றம் சாதாரண வீட்டின் தோற்றத்தை உடைய போதினிலும் உள்ளே மூன்று அடுக்காக சுமார் 40 அடிக்கு மேல் நிலத்தின் கீழ் பாரிய பதுங்கு குழி அமைக்கபட்டுள்ளது.
அத்துடன் வாகன தரிப்பிடமும் நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டை சுற்றி பல காவலரண்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலே இந்த வீடு அமைந்திருந்துள்ளது.
p19a  prabakaran_house_002prabakaran_house_003 thalaivar_06