முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் வீட்டை பொதுமக்கள் பார்வையிட படையினர் அனுமதித்துள்ளனர்.
இந்த வீட்டின் முகப்பு தோற்றம் சாதாரண வீட்டின் தோற்றத்தை உடைய போதினிலும் உள்ளே மூன்று அடுக்காக சுமார் 40 அடிக்கு மேல் நிலத்தின் கீழ் பாரிய பதுங்கு குழி அமைக்கபட்டுள்ளது.
அத்துடன் வாகன தரிப்பிடமும் நிலத்திற்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது.
காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த வீட்டை சுற்றி பல காவலரண்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலே இந்த வீடு அமைந்திருந்துள்ளது.