பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2013

இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு கப்பல் பணியாளர்களுடன் சென்ற கப்பலொன்று சோமாலிய கடற்பரப்பில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எம்.வி. அல்பெடோ என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது
. இந்த விபத்தில நான்கு வெளிநாட்டவரும் ஏழு சோமாலிய கடற்கொள்ளையர்களும் இறந்துள்ளனர்.
மேலும் 13 பேரை காணவில்லை.

குறித்த கப்பலில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை சேர்ந்த 23 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசிய நிறுவனமொன்றிற்குச் சொந்தமான குறித்த கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.