பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2013

புத்தகயா மகா போதி விஹாரையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வன்மையாக கண்டித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 


பௌத்த மக்களின் புனித தளமாக மதிக்கப்படும் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயா விஹாரை தாக்கப்பட்டதையிட்டு எமது கட்சியின் சார்பில் பலத்த கண்டனத்தை வெளியிடுகிறேன். அதிர்ஷ்டவசமாக அங்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படாதது ஓரளவு ஆறுதலை அளிக்கிறது. 

உலக நாடுகள் பலவற்றில் சமய வழிபாட்டுத் தளங்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எந்தவொரு சமயத்தளத்தின் மீதும் மேற்கொள்ளப்படும் இவ்வாறான இழி செயல்களை எமது கட்சி ஒரு போதும் அனுமதிக்காது. இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சரியான முறையில் இனங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும். 

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம், தமது கட்சியின் சார்பில் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.