பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

கவிஞர் வாலியின் உடல் வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு
 

பிரபல கவிஞர் வாலி சென்னையில் உடல்நலக் குறைவால் 18.07.2013 வியாழன் மாலை காலமானார். 


காதல் திருமணம் செய்து கொண்ட வாலியின் மனைவி பெயர், ரமணத்திலகம். அவரும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். வாலி - ரமணதிலகத்துக்கு பாலாஜி என்ற மகன் உள்ளார்.
மறைந்த வாலியின் உடல் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வாலியின் மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிசடங்கு 19.07.2013 வெள்ளிக்கிழமை சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.