பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2013

முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியின் போது, இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் ஆயிரம் டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டி மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றது. இதன் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்து
இறுதிப்போட்டிக்கு முன்னேறின. மேற்கிந்திய தீவுகள் அணி வாய்ப்பை இழந்து வெளியேறியது. 

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள், ஆப் ஸ்பெயினில் கடந்த 11ஆம் திகதியன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில், களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை அணி வீரர் லிசித் மாலிங்க மீது அரங்கில் இருந்த பார்வையாளர் ஒருவர் போத்தல்களால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதோடு போட்டி 10 நிமிடம் தடைப்பட்டது.

இதன்பின் தாக்குதல் நடத்திய நபரை போர்ட் ஒப் ஸ்பெயின் மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது ஆயிரம் டொலர் பிணையில் செல்ல நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் பணத்தை செலுத்த தவறும்பட்டசத்தில் இரண்டு கிழமை கடுழீய சிறைதண்டனை வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.