பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2013

தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கும் இலங்கை அணியின் தலைவராக வீரர் தினேஸ் சண்டிமல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உப தலைவராக லஹிரு திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்ற முக்கோண தொடரில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் உரிய நேரத்திற்கு பந்துவீசாததால் சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலால் ஏஞ்சலோ மெத்தியூஸ{க்கு இரண்டு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.