பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2013

வங்கி ஊழியராக நடித்து வாடிக்கையாளரிடம் கொள்ளை

அட்டனில் அமைந்துள்ள மக்கள் வங்கிக் கிளையில் வங்கி ஊழியர் போல் நடித்து வாடிக்கையாளரை ஏமாற்றி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை
மர்ம நபர் ஒருவர் அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
அட்டன் வெளி ஓயா பிரதேசத்தை சேர்ந்த கணவர் மனைவி இருவரும் நேற்று திங்கட்கிழமை மக்கள் வங்கி அட்டன் கிளைக்கு வங்கி நடவடிக்கைக்கு வந்திருந்த வேளையில் இவர்களிடம் வந்த ஒருவர் சிறிது நேரம் உரையாடிய பின்னர் இவர்கள் வங்கிக்கு வந்த காரணத்தை கேட்டறிந்துள்ளார்.
பின்னர் இவர்களிடம் இருந்த வங்கி கணக்கு புத்தகத்தை பார்த்து உங்களுக்கு பரிசு கிடைத்துள்ளது. பரிசை பெற வேண்டுமானால் ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டுமென கூறி பணத்தை பெற்று வங்கியின் உள்ளே சென்று பணம் வைப்பிடும் காசாளரிடம் ஏதோ பேசியுள்ளார்.
அதன் பின்னர் இவர்களிடம் வந்து சிறிது நேரம் இருக்குமாறு கூறியுள்ளார் பின்னர் ஒருவருக்கு போன் எடுக்க வேண்டும் கைத்தொலை பேசியை தாருங்கள் பேசி விட்டு தருகின்றேன் எனக் கூறி தொலைபேசியை வங்கிக்கு வெளியே எடுத்து சென்றவர் திரும்பவே இல்லை.
அதன் பின்னரே திருடனிடம் ஏமாந்து போனது தெரிய வந்துள்ளது. பணத்தையும் தொலைபேசியையும் பறிகொடுத்தவர்களுக்கு இச்சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.