பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2013

பேனையும் பென்சிலும் ஏந்த வேண்டிய வேளையில் பிரபாகரனால் துப்பாக்கியை ஏந்த வேண்டி ஏற்பட்டது - பந்துல

தமிழ் மாணவர்கள் பேனையும் பென்சிலும் ஏந்த வேண்டிய சந்தர்ப்பத்தில் பிரபாகரனால் துப்பாக்கி ஏந்த வேண்டி ஏற்பட்டது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன
தெரிவித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் மக்களுக்கு இருந்த வளம் கல்வியாகும். குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் உயர் பதவியில் இருந்த வைத்தியர்கள், பொறியியலாளர்கள் கணக்காளர்கள், கல்வித்துறை உயர் உத்தியோகத்தர்கள் மற்றும் உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் தமிழ் பேசும் மக்களேயாவர்.

எனினும் கடந்த 30 வருடங்களாக தமிழ் பேசும் மக்களுக்கு, மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோருக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. இக்காலத்தில் தமிழ் மக்களுக்கு அதிர்ஷ்டதானம் இல்லாத நிலை ஏற்பட்டு பேனையும் பென்சிலும் ஏந்த வேண்டிய சந்தர்ப்பத்தில் பிரபாகரனால் துப்பாக்கி ஏந்த வேண்டி ஏற்பட்டது. இதனால் அந்த மாணவர்களுக்கு இருந்த உயர்ந்த சந்தர்ப்பங்கள் இல்லாமல் செய்யப்பட்டது என்றார்.