பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2013

பாமகவை தடை செய்யவேண்டும் ; திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே மனித உரிமை பாதுகாப்புமையம் இயக்கம் சார்பில் மாவட்ட செயலாளர் பொன்.சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி இளவரசன் மரணத்திற்கு காரணமான மரக்காணம் கலவரத்திற்கும் காரணமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிர்ப்பாக அரசியல் செய்கிற சாதி வெறியை தூண்டுகிற, வன்னியர் சங்கத்தையும், பாமகவையும் தடை செய்யவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
ராமதாஸ், அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கும் என்ற நம்பிக்கை இல்லை.  இதில் தாழ்த்தப்பட்ட மக்கள் தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கம் ஒன்றை உருவாக்கி போராட வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இரண்டு பெண்கள் உட்பட 15 பேரை அனுமதியில்லாமல ஆர்ப்பாட்டம் செய்ததாக கூறி போலீசார் கைது செய்தனர்.