பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2013

,

DSC04841

சர்வதேச போட்டியில் மூன்றாவது இடத்தை கைப்பற்றிய தமிழீழ அணி, தமிழீழம் 5 : ரேசியா 0

ஐநா சபையால் அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான சர்வேதச உதைபந்தாட்ட போட்டியின் கடைசி நாளான இன்று 7 ஜூலை 2013அன்று ஞாயிறு மாலை 15:00 மணிக்கு போட்டியின் மூன்றாவது இடத்தை தக்கவைத்து கொள்ளுவதற்காக தமிழீழ அணி Rateiaஅணியுடன் மோதினார்கள்

  இந்தசர்வதேச போட்டியானது கடந்த வியாழக்கிழமை Isle of man இல்Tynwald என்னும் மைதானத்தில் தொடங்கியதுமொத்தம் ஆறு அணிகளுக்கான இந்த போட்டி இரண்டு பிரிவுகளாக தொடங்கி குழு Aமற்றும் குழு B என்ற நிலைப்பாட்டில் குழு இல் மூன்று அணிகளும் குழு B இல் மூன்று அணிகளும் மோதி அதில் தெரிவடைந்த அணிகள் மீண்டும் இன்று முதலிடம் மற்றும் மூன்றாவது ஐந்தாவது இடங்களுக்காக போட்டி இட்டனர்.
இது வரை நடந்த போட்டிகளில் குழு A இல் இருந்து Occitania அணியும் குழு B இல் இருந்து StJohns அணியினரும் பங்கு பெற்ற அணைத்து போட்டிகளிலும் வென்றுமுதல் இடத்துக்காக இன்று மோதுகின்றனர்.அதேபோல குழு A இல் இருந்து தமிழீழ அணியும் குழு B இல் இருந்துRaetia அணியினரும் மூன்றாவது இடத்துக்காகவும் குழு A இல் இருந்துSealland அணியினரும் குழு B இல் இருந்து Alderney அணியினரும் ஐந்தாவது இடத்துக்காக இன்று போட்டியிடுகின்றனர்
நேற்றுமாலை (6 ஜூலை 2013 )Occitanaia அணியினருடன் மோதிமுதல் இடத்துக்கான போட்டிவாய்ப்பை இழந்த தமிழீழ அணி இன்று மூன்றாவது இடத்துக்காக Raetia அணியினருடன் மோதினர்
 தமிழீழ தேசியகீதத்துடன் உற்சாகமாக தொடங்கிய இன்றையபோட்டி கட்டாயமாக வெற்றிகாணுவோம் என்ற நிலையில் மிகவும் உற்சாகமாக நடந்தது.
இன்று அந்தோனிநாகலிங்கம் (23) பந்துகாப்பளனாக பொறுப்பேற்று சிறப்புடன் விளையாடினர் அவருடன்
அருண்விக்னேஸ்வராஜா (14)
கதிரவன்உதயணன்(18)
சிவரூபன்சத்தியமூர்த்தி (5)
கெவின்நாகேந்திரா (6)
கஜேந்த்திரன்பாலமுரளி (10)
ரொன்சன்வல்லிபுரம்(7)
மதன்ராஜ்உதயணன்(15)
பிரவீன்நல்லதம்பி(20)
ஷாசில்நியாஸ்(4)
பனுஷன்குலேந்திரன் (8)
பிரஷாந்த்ராகவன் (9)
மேனன்நகுலேந்திரன் (2)
ஜிவிந்தன்நவநீதகிருஷ்ணன் (11)
ஆகியோரும்பங்குபெற்றனர்.
போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருப்பதையும் வீரர்களின் வேகமான விளையாட்டையும் பார்த்து எமது அணியை ஆதரிக்கவந்தோர் பெருமை கொண்டனர்.
முதலாவது இலக்கை லாவகமாக கைப்பற்றிய சிவரூபன் (5) அவர்கள் போட்டி தொடங்கி 3 நிமிடத்துக்குள் தமிழீழ அணிக்கு தமது முதல் பந்தினை கோல் கம்பத்தினுள் செலுத்தி போட்டியின் சமநிலையினை மாற்றினார்கள்அதை அடுத்து 15.20 க்கு கஜேந்திரன் (10) உதவியுடன் மதன்ராஜ் (15) அணிக்கான இரண்டாவது இலக்கை உள்ளே செலுத்தி அணியின் இலக்கை இரண்டாக உயர்த்தினர்
மத்தியஸ்தரின் எச்சரிக்கைளையும் மீறி தமிழீழ அணிவீரர்களின் ஆட்டத்தை முறையற்றவகையில் தடுத்து விளையாடிய Raetia அணியில் மூன்றுபேருக்கு சிவப்புமட்டை காட்டப்பட்டு போட்டியைவிட்டு வெளியேற்றபட்டனர்முதலுதவிக்கு பொறுப்பாக இருந்த தீபன் அவர்கள் வீரர்களின் காயங்களை உடனுக்குடன் சரி செய்து அவர்களுக்கு உற்சாகம் தெரிவித்து வீரர்களை போட்டியில் தொடர்ந்துபங்கு பெறுமாறு வழிவகுத்து கொண்டு இருந்தார்
போட்டியின் கடைசி சுற்றில் பனுஷந்துகாக(8) மைதானத்தில் இறங்கிய ஜிவிந்தன் (11) தொடர்ந்து மூன்று உதைபந்தாட்ட இலக்கை எதிர் அணிபந்தாட்ட இலக்கு வலைக்குள் இறக்கி ஈழ அணியின் மொத்த இலக்கு எண்ணிக்கைகளை ஐந்தாக உயர்த்தி அணிக்கு பெருமை சேர்த்தார்
மொத்தம் ஏழு முயற்சியில் இரண்டு இலக்குகள் Raetia அணிபந்து காப்பாளரால் பாதுகாக்கப்பட்டதால் தமிழீழ அணி ஐந்து உதைபந்தாட்ட இலக்குகளை எடுத்து இந்த போட்டியை வேன்றனர்.
இங்கிலாந்து முன்னால் உதைபந்தாட்ட வீரர் திரு Paul Reaney அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு தமிழீழ அணிவீரர்களை பாராட்டி அவர்களுக்கு மூன்றாவது இடத்துக்கான வெற்றிக்கோப்பையையும் ஆட்டகதாநாயகனுக்கான கோப்பையையும் பங்குபற்றிய அனைவருக்கும் பதக்கம் அணிவித்தார் .
இவர்களின் வெற்றியை உலகெங்கும் பரவ செய்வதில் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் பெருமை கொள்கிறதுஇந்த வெற்றியைசாத்தியமாக்கிய அணைத்து உள்ளங்களுக்கும் தமிழ் இளையோர் அமைப்பு ஐக்கிய இராச்சியம் தமது நன்றிகளை தெரிவித்துகொள்கிறது.  மீண்டும் அடுத்தவருடம் நடைபெற இருக்கும் சர்வதேசபோட்டியில் தமிழீழ அணிபங்குபெறும்.
DSC_0127DSC_0134DSC_0519DSC04691DSC04699DSC04725DSC04735DSC04876DSC04910DSC04960