பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூலை, 2013

,

யாழில் இடம்பெற்ற இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 70வது ஆண்டு விழா
யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தோழர் சிவராஜா தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டியூ.குணசேகர, கட்சியின் உபதலைவரும் புனருத்தாபன அமைச்சருமான சந்திரசிறி கஜதீர, நேபாள அரசின் முன்னைநாள் பிரதமரும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எவ் பொதுச்செயலர் தி.சிறீதரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் நேபாள முன்னைநாள் பிரதமரும், நோபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான தோழர் மாதேவ் குமார் நேபாள் மற்றும் தோழர் டியூ குணசேகர ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். அத்துடன் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன.