பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழில் வாதாடலாம்! நீதிபதி அனுமதி!
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பகத்சிங் என்பவர், கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் தாக்கல்
செய்த இரண்டு முன்ஜாமீன் மனுக்களில் தமிழில் வாதாடியதால், நீதிமன்றம் அம்மனுக்களை தள்ளுபடி செய்தது. எனவே தமிழில் பேசியதால் தள்ளுபடி செய்தததை எதிர்த்து மனு தாக்கல் செய்ததாக கூறியிருந்தார்.

அந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகினர். வடமாநிலங்களில் இந்தி மொழிகளில் வாதாடுகின்றனர். இதேபோல் தமிழகத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.
தான் பணிபுரியும் நீதிமன்றத்தில் தாராளமாக தமிழில் வாதாடலாம் என்றும், அதனை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிபதி மணிக்குமார் உத்தரவிட்டதையடுத்து பகத்சிங் மனு பைசல் செய்யப்பட்டது.