பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

கவிஞர் வாலி மறைவு தமிழ் இனத்திற்கே ஒரு மாபெரும் இழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல
 

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை, கவிஞர் வாலியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கவிஞர் வாலியின் மறைவு திரையுலகத்திற்கு மட்டுமல்ல, தமிழ் இனத்திற்கே ஒரு மாபெரும் இழப்பு ஆகும். ஏறக்குறைய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, திரையுலகில் ஒரு ஜாம்பாவானாக திகழ்ந்தார். கவிஞர் வாலியின் இழப்பு ஈடுஇணையற்ற மாபெரும் இழப்பாகும்.  இவ்வாறு கூறினார்.