பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2013

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
நெய்வேலி என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதையடுத்து என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


இந்தநிலையில் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை விற்கும் முடிவை எடுத்ததால், அதனை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து மும்பையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசு நிறுவனங்களுக்கு விற்க செபி ஒப்புதல் அளித்துள்ளது. 
செபியின் ஒப்புதலையடுத்து, நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. செபியின் ஒப்புதலையடுத்து நடந்த தொழிற்சங்க ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
பங்கு விற்பனை முடிவுக்கு எதிராக 13 நாட்களாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.