பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2013

பாளை சிறையில் இருக்கும் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்
கடந்த சனிக்கிழமை மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏவும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான வேலுச்சாமி கைது செய்யப்பட்டார். குவாரி
உரிமம் பெற்றுத்தருவதாக ரூபாய் 25 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, உரிமம் பெற்றுத்தராமல் இழுத்தடித்தாக சென்னையைச் சேர்ந்த கவுதம் ரெட்டி என்பவர் மதுரை எஸ்.பி.பாலகிருஷ்ணனிடம் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட வேலுச்சாமியை, கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மதுரை ஜெ.எம்.1 நீதமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். 
இதையடுத்து ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் வேலுச்சாமி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. திங்கள்கிழமை இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வேலுச்சாமி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகையால் நாளை அவர் விடுதலை ஆவார் என்று தெரிய வருகிறது.