பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2013

கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்தை பேரறிவாளனுக்கு தெரிவிக்க மறுப்பு
முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, தற்போது வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளனின் கருணைமனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என மத்திய தகவல் ஆணையம் கூறியிருக்கிறது.
கருணை மனுக்கள் குறித்த மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளுக்கு தகவலறியும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
எனவே பேரறிவாளன் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டேயாக வேண்டும் என வற்புறுத்த முடியாது என தகவல் ஆணையர் சுஷ்மா சிங் தீர்ப்பளித்திருத்திருக்கிறார்.
ஆனால் ராஜீவ் காந்தி கொலை குறித்து விசாரித்த நீதிபதி, ஜெயின் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி உருவாக்கப்பட்ட பல் முனை கண்காணிப்பு முகமை எம்டிஎம்ஏயின் அறிக்கை பேரறிவாளனுக்குத் தரப்படலாம் என்றும், அதே நேரம் அவ்வறிக்கையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அதிகாரத்திற்குட்பட்டதில்லையென்றால் அது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சுஷ்மா சிங் கூறியிருக்கிறார்.
அண்மையில் வீடியோ கான்ப்ரென்சிங் மூலம் பேரறிவாளன் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதன் விவரங்கள் கோரியிருந்தார்,
அது குறித்தே மத்திய தகவல் ஆணையம் இப்போது தனது தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.