பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜூலை, 2013

தனது பிள்ளைகளை ஒப்படைக்குமாறு லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் சென்னை நீதிமன்றில் வழக்கு
லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவர், தனது இரண்டு பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள், எஸ். ராஜேஸ்வரன், ரி. மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் எதிர்வரும் 30ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2011 ஏப்ரல் மாதம் 08ம் திகதி தனது மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் லண்ட.னில் இருந்து மதுரைக்கு வந்ததாகவும் அதற்கு பின்னர், தன்னுடன் பேச மறுத்ததுடன், பிள்ளைகளையும் பேச அனுமதிக்கவில்லை என மனுதாரர் கூறியுள்ளார்.
தனது பிள்ளைகள் சுற்றுலா விசா அனுமதியில் இந்தியாவுக்கு வந்து, அனுமதி காலம் முடிந்து, சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகவும் தனது பிள்ளைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க மனைவிக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பிள்ளைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுதார் கோரியுள்ளார்.