பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூலை, 2013

,

இளவரசன் மரணம் : அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
தர்மபுரியில் திவ்யாவின் கணவர் இளவரசன்,  திவ்யாவை பிரித்துவிட்ட சூழ்நிலையில் இன்று, தர்மபுரியில் அரசு கலைக்கல்லூரி
பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே மரணம் அடைந்துள்ளார்.  இது கொலையா? தற்கொலையா? என்று சந்தேகம் நிலவி வருகிறது.

இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் ’’இளவரசனின் உடலை அடக்க செய்ய தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் தர்மபுரிக்கு வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.  அனைத்து கட்சித்தலைவர்கள் தமிழகத்தின்  அரசியல் நாகரிகத்தை சமூக நாகரீகத்தை பாதுகாக்கக்கூடிய வகையில் இத்தகைய கொடுமைகள் தொடராமல் தடுக்கக்கூடிய வகையில் இளவரசனின் உடல் அடக்கத்தில் பங்கேற்கவேண்டும். 

அதுதான் தற்போதைக்கு நாம் தமிழ்நாட்டுக்கு தமிழக மக்களுக்கு செய்யவேண்டிய கடமை என்று அனை த்து கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.