பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூலை, 2013

,

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார் இளவரசன் : ரயில்வே போலீசார் வழக்கு பதிவு
தர்மபுரியில் திவ்யாவின் கணவர் இளவரசன்,  திவ்யாவை பிரித்துவிட்ட
சூழ்நிலையில் இன்று, தர்மபுரியில் அரசு கலைக்கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே மரணம் அடைந்துள்ளார்.

இளவரசன் மரணம் கொலையா? தற்கொலையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.  இளவரசன் குடும்பத் தினர் இது கொலையே என்கின்றனர்.  இளவரசன் மரணத்தில் மர்மம் இருப்பதாக விடுதை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனும் கூறியுள்ளார்.
இந்நிலையில் ரயில் முன் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மதியம் ரயில் முன் பாய்ந்து ஒரு இளைஞர்( இளவரசன்) தற்கொலை செய்துகொண்டார் என்று ரயிலில் இருந்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் ரயில்வே போலீசார் தற்கொலை என்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.