பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூலை, 2013

,

இளவரசன் மரணம் : தர்மபுரியில் பஸ்கள் ஓடவில்லை
தமிழ்நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய தர்மபுரி திவ்யாவின் காதல் கணவர் இளவரசன் இன்று அதிர்ச்சி தரும்படி தருமபுரி அரசுக் கல்லூரி பின்புறம் உள்ள
தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். அவரது உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையைச்சுற்றிலும் சேலம் சாலையில் கடைகள் மூடப்பட்டுள்ளன.  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்று தலித் அமைப்பினர் மருத்துவமனைக்கு முன்பாக திரண்டிருப்பதால் பதட்டம் நிலவுகிறது.
இதனால் அந்த வழியாக சேலம் செல்லும் பேருந்துகளும், சேலத்திலிருந்து தர்மபுரி வழியாக பெங்களூர் செல்லும் பேருந்துகளும் புறவழிச்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.  
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர், அரூர், ஊத்தங்கரை, பாப்பிரெட் டிபட்டி, போன்ற மாவட்டத்தின் உட்பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டன.