பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

சீமானுக்கு கைது வாரண்ட்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் நீதிமன்றம்.


கடந்த 2008ம் ஆண்டும் ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரையுலகினர் பங்கேற்றனர்.  அந்த கூட்டத்தில் பேசிய சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு பதிவு செய்தது திமுக அரசு.  இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார் சீமான்.
இன்றும் அவர் ஆஜராகவில்லை.  இதனால் நீதிபதி சதாசிவம், வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.   இதனால் சீமான் எந்த நேரமும் கைது செய்யப்படலாம்.