பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2013

ராஜீவ் கொலை வழக்கு: கே.பியை விசாரிக்குமாறு மனுத் தாக்கல்


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பினரான குமரன் பத்மநாபன் என்பவரை விசாரணை செய்யுமாறு சென்னை
உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஜெபமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை.
எனவே அவரை விசாரித்தால் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான உண்மைகள் வெளிவரும் என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராஜேஷ்குமார், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.