பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2013

விக்னேஸ்வரன் பாலசிங்கம் என்றால் தாயா மாஸ்டர் சம்பிக்கவா : அசாத் சாலி கேள்வி

விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன்
என்றால் சம்பிக்கவின் மறு அவதாரம் தயா மாஸ்டராவென கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சராக முன்னாள் உயர் நிதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டமை அனைவரும் விரும்பத்தக்க விடயமாகும்.
இந்நிலையில், விடுதலைப் புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் என சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் சம்பிக்கவின் மறு அவதாரமா தயா மாஸ்டர்?
இவ்வாறு நாட்டில் இனவாதத்தை தூண்டும் அரசாங்கத்திற்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்ல பாடம்புகட்ட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.