பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

இராஜதந்திர ரீதியிலான வடமாகாண தேர்தலை நாம் வென்றெடுப்போம் - அரியநேத்திரன் எம். பி.

வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் போட்டியிடவில்லை. இவற்றுக்கும்
அப்பால் தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டுள்ளனர் என்பதை மீண்டும் ஒரு தடவை உலகறிய வைக்கவும் பல பரிணாமங்களை அடைந்துள்ள எமது விடுதலைப் பயணம் இராஜதந்திர ரீதியாக முனைப்பு பெறவுமே நாம் இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
துறைநீலாவணை மத்திய விளையாட்டுக் கழகம் நடாத்திய மின்னொளியிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அங்கு மேலும் பேசுகையில்,
கொங்கிறீட் வீதிகள் தருவோம், வீடுகள் தருவோம், வேறு பல வசதிகளை செய்து தருவோம் என்று நாம் அரசியல் செய்யவில்லை. மாறாக 62 வருட காலமாக பல கோணங்களில் போராடி வரும் எமது இனத்தின் விடுதலையை வென்றெடுப்பதே எமது நோக்கமாகும் என்றார்.