பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2013

ஊவா மாகாண அமைச்சர் ஒருவரின் அச்சுறுத்தலால் பதுளை மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் இன்று மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று இடம்பெறவிருந்த ஜும்ஆ தொழுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை அவ்விடத்திற்கு வருகை தந்த ஊவா மாகாண அமைச்சர் ஒருவர் குறித்த மஹியங்கனை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையையோ அல்லது ஐந்து வேளை தொழுகைகளோ
நடைபெறக்கூடாது எனவும் அவ்வாறு மீறி தொழுதால் பிரச்சினை ஏற்படுமெனவும் கூறிச் சென்றுள்ளார்.

இதனால் அந்த பள்ளிவாசல் உடனடியாக மூடப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அங்கு நடைபெறவிருந்த ஜும்ஆவும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்பு குறித்த பள்ளிவாயல் தாக்கப்பட்டு கேவலமான முறையில் பள்ளிவாயலினுள் பன்றி இறைச்சி வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.