பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2013

குழந்தையைப் பெற்று உயிரோடு புதைத்துவிட்டு தாய் தலைமறைவு: வவுனியாவில் சம்பவம்
வவுனியாவில் தான் பெற்றெடுத்த குழந்தையை தாய் மண்ணுக்குள் புதைத்த சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா கிடாச்சூரி அம்மிவைத்தான் கிராமத்தில் பிறந்து ஒரே நாளான தனது குழந்தையை மண்ணை வெட்டி புதைத்து விட்டு தாய் தலைமறைவாகிவிட்டதாக வவுனியா மாவட்ட
சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி  ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.
கணவன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் 7 வயது மகனுடன் அம்மிவைத்தான் கிராமத்தில் வசித்து வந்த பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்திருந்த நிலையில் அதனை உடனேயே மண்ணினுள் புதைத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அயலவர்களினால் பொலிஸாருக்கும் தனக்கும் அறிவிக்கப்பட்டதன் அடிப்டையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
இந்நிலையில் தற்போது அத்தாய் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர் என ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.