பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூலை, 2013

சவூதியில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட மனைவி: மொனராகலையில் கணவன் உண்ணாவிரதம்
சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பப்பட்ட தனது மனைவி அங்கு விபச்சாரத்தில் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்து மொனராகலையில் ஒருவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மொனராகலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த மாதம் பணிப்பெண்ணாக சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
எனினும் அவரது முகவர் அந்தப் பெண்ணை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, இடத்துக்கிடம் அழைத்துச் சென்று விபச்சாரத்தில் தள்ளியுள்ளதாக அவரது கணவருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தனது மனைவியை மீட்டுத்தருமாறு கோரி அப்பெண்ணின் கணவர் தனது மூன்று பிள்ளைகளுடன் மொனராகலை பஸ் நிலையத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றார்.
அரசாங்கம் இது விடயத்தில் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.