பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2013

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மீண்டும் ஈழத் தமிழர்கள் பட்டினிப் போராட்டம்
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில்
குதித்து உள்ளனர். தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.

காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார் , காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் போராட்டத்தை தொடங்கினர். நாளை முதல் மேலும் பலரும் இப்போராட்டத்தில் இணையுள்ளதாக தெரிவித்தனர்.