பக்கங்கள்

பக்கங்கள்

21 ஆக., 2013

தாயாருடன் ஒரே காரில் ஐகோர்ட்டுக்கு வந்தார் சேரன் மகள் தாமினி
இயக்குநர் சேரன் தனது மகள் தாமினி வழக்கு விசாரணைக்காக சென்னை ஐகோர்ட் வந்தார்.  அவர் வந்து சிறிது நேரம் கழித்து ஒரே காரில் தாமினி, அவரது தாயார் செல்வராணி, இயக்குநர் அமீர்,
பள்ளி தலைமை ஆசிரியர்,இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் வந்தனர்.


இயக்குநர் அமீர், தாமினியின் கையைப் பிடித்து ஆறுதல் கூறி அழைத்து வந்தார்.
இயக்குநர் சேரன் மகள் தாமினி,  சந்துரு என்ற வாலிபருடன் காதல் வயப்பட்டு  வீட்டை விட்டு வெளியேறி னார். இதைதொடர்ந்து சேரன் போலீசில் அளித்த புகாரில்,  சந்துருவின் நடவடிக்கை சரியில்லை என்றும், அவரது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.
சேரனின் மகள் தாமினிக்கு பெண் போலீசார் கவுன்சிலிங் அளித்தனர். கல்லூரி படிப்பை  முடித்த பின்னர் காதலை பற்றி சிந்திக்கலாம் என்று அறிவுரை கூறினர். ஆனால் தாமினி காதலன் சந்துருவு டன்தான் செல்வேன் என்று பிடிவாதமாக கூறினார்.
இதனால் அவரை போலீசார் காப்பகத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே சந்துருவின் தாய் ஐகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்கு தாமினி, தான் படித்த பள்ளி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கி இருக்க உத்தரவிட்டனர்.
இதன்படி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அவர் தங்கியிருந்தார். தலைமை ஆசிரியரின் வீட்டில் தாமினி தங்கி இருந்த போது அவருக்கு தினமும் கவுன்சிலிங் அளிக்கப் பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்காக தாமினி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.