பக்கங்கள்

பக்கங்கள்

15 ஆக., 2013

திருகோணமலை மாணவர் கொலை: விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்ந்தும் விளக்க மறியலில்

திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பன்னிரெண்டு விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடாத்துமாறு திருகோணமலை நீதவான் ஏ.எல். அஷ்ரா உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
 
சம்பவத்தில் உயிரிழந்த ஒரு மாணவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்ததுடன் ஏனைய மாணவர்கள் சில பல்கலைக்கழகங்களில் கல்வித் தொடர்வதற்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.