பக்கங்கள்

பக்கங்கள்

14 ஆக., 2013


கிரான்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் - ஐரோப்பிய ஒன்றியம்! 
கிரான்ட்பாஸ் மற்றும் வெலிவேரிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடாத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இவ்விரு சம்பவங்கள் குறித்தும்
கூடிய கவனம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. அனைத்து இலங்கை பிரஜைகளினதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் பக்கச்சார்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஒகஸ்ட் 1ம் திகதி வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், பலர் காயமடைந்திருந்தனர். 
ஒகஸ்ட் மாதம் 10ம் திகதி கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் காயமடைந்திருந்தனர். அமைதியான முறையில் மக்கள் ஒன்று கூடுதல், சுதந்திரமாக மத வழிபாடுகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.