பக்கங்கள்

பக்கங்கள்

20 ஆக., 2013

பேராசிரியருடன் உல்லாசம் : பெற்றோரிடம் செல்ல மறுக்கும் மாணவி

பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த பல் டாக்டர் பாலின் விஜயசந்திரன் (43). இவர் பணகுடி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.



இந்த கல்லூரியில் நாகர்கோவிலை சேர்ந்த ஷோபனா என்ற மாணவி 2–ம் ஆண்டு படித்து வருகிறார். திருமணமாகி குழந்தைகள் உள்ள பேராசிரியர் பாலின் விஜயசந்திரன் "தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும், உன்னை கல்யாணம் செய்து கொள்ள விரும்பிகிறேன்" என்று மாணவி ஷோபனாவிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய ஷோபனாவும் பேராசிரியரின் இச்சைக்கு இணங்கியுள்ளார். அவர் நெல்லை மற்றும் நாசரேத் தில் உள்ள தனது ஆஸ்பத்திரிக்கு மாணவி ஷோபனாவை அழைத்து வந்து கற்பழித்துள்ளார்.  இந்த நிலை யில் கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் விசாரித்தனர். அப்போது மேற்கண்ட தகவல் அவர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் பணகுடி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பல் டாக்டர் பாலின் விஜயசந்திரனை இன்று கைது செய்தனர். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி ஷோபனாவையும் போலீசார் மீட்டனர்.
ஷோபனா பெற்றோருடன் செல்ல மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.